உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 26ல் பள்ளிகள் அளவில் செஸ் சிறுவர் -- சிறுமியருக்கு அழைப்பு

26ல் பள்ளிகள் அளவில் செஸ் சிறுவர் -- சிறுமியருக்கு அழைப்பு

சென்னை, உலக செஸ் சாம்பியன் குகேஷை பாராட்டும் வகையில், நாளை மறுநாள் பள்ளிகளுக்கு இடையிலான செஸ் போட்டி நடக்கிறது.வேலம்மாள் வித்யாலயா பள்ளி சார்பில், உலக செஸ் சாம்பியன் குகேஷை பாராட்டும் வகையில், பள்ளிகளுக்கு இடையிலான செஸ் போட்டி, நாளை மறுநாள் நடக்கிறது. போட்டிகள், மாடம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடக்கிறது. 7, 9, 11, 13, 15 வயதுக்கு உட்பட்டோருக்கு தனித்தனியாக போட்டிகள் நடக்க உள்ளன. மொத்தம் ஏழு சுற்றுகள் வீதம், 'சுவிஸ்' அடிப்படையில், 'பிடே' விதிப்படி நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் சிறுவர், சிறுமியருக்கு சைக்கிள் பரிசாக வழங்கப்படுகிறது.போட்டியில், சென்னை உட்பட அனைத்து மாவட்ட சிறுவர் - சிறுமியரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர், 86102 92372, 99942 13268 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ