மேலும் செய்திகள்
ஸ்போர்ட்ஸ் கார்னர்
29-Nov-2025
சென்னை: மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சி.எஸ்.கே., - திருள்ளூவர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து, மாவட்ட அளவில் கல்லுாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியை, அடுத்த மாதம் நான்காவது வாரத்தில் நடத்த உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கல்லுாரி அணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, அம்பத்துாரில் உள்ள மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில், நாளை முதல் பெற்று கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வரும் 31ம் தேதி என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
29-Nov-2025