234 போலீஸ் வாகனங்கள் ஏலத்தில் பங்கேற்க அழைப்பு
சென்னை, சென்னை காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 46 நான்கு சக்கர வாகனங்கள், 188 இருசக்கர வாகனங்கள், ஜூலை, 2ம் தேதி காலை, 10:00 மணிக்கு, பகிரங்க ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது.ஏலத்திற்கான முன்பதிவு, 26ம் தேதி காலை, 10:00 மணி முதல் 2:00 மணி வரை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற உள்ளது. பங்கேற்க விருப்பமுள்ளோர், தங்களது அடையாள அட்டை மற்றும் ஜி.எஸ்.டி., பதிவு எண் சான்றுடன் வந்து முன்பதிவு கட்டணம் 1,000 ரூபாய் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.முன்பணம் செலுத்தி பதிவு செய்த ஏலதாரர்கள் மற்றம் ஏலக்குழுவினர் ஆகியோர் முன்னிலையில், பகிரங்க ஏலம் நடக்கும்.ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலத்தொகையில் அன்றைய தினம், 25 சதவீதம் தொகையும், மீதமுள்ள 75 சதவீத தொகை மற்றும் ஜி.எஸ்.டி., கட்டணத்தை மறுநாள் செலுத்திய பின், வாகன விற்பனைக்கான ஆணை வழங்கப்படும் என, காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.