திருவள்ளூர் லீக் கம் நாக் அவுட் கல்லுாரி அணிகளுக்கு அழைப்பு
சென்னை, திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் மற்றும் சி.எஸ்.கே., அகாடமி இணைந்து, கல்லுாரிகளுக்கு இடையிலான, 'லீக் கம் நாக் அவுட்' கிரிக்கெட் போட்டியை, 2025 பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கல்லுாரிகள் மட்டுமே பங்கேற் முடியும். பங்கேற்க விரும்பும் கல்லுாரி அணிகள், அம்பத்துார், எம்.டி.எச்., சாலையில் உள்ள, திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் 23ம் தேதிக்குள் சங்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.போட்டி தொடர்பான விபரங்களுக்கு, 98404- 82220, 94443- 29232 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.