உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மாநகராட்சியில் 262 பேருக்கு பணி நிரந்தரம்

 மாநகராட்சியில் 262 பேருக்கு பணி நிரந்தரம்

சென்னை: தற்காலிக பணியாளர்களாக, 14 ஆண்டுகளாக பணியாற்றி வந்த 226 பேரை, சென்னை மாநகராட்சி பணி நிரந்தரம் செய்துள்ளது. புறநகர் பகுதிகளை சேர்த்து சென்னை மாநகராட்சி, 2011ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, உள்ளாட்சிகளில் பல ஆண்டுகளாக தற்காலிகமாக பணியாற்றி வந்த, 908 பேர் தினக்கூலி பணியாளர்களாக, மாநகராட்சியில் சேர்க்கப்பட்டனர். இவர்கள், வளசரவாக்கம், அம்பத்துார், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வந்தனர். மாநகராட்சி பணி நிரந்தரம் செய்யாமல் இழுத்தடித்ததால், பலர் பணியில் இருந்து விலகி வேறு பணிக்கு சென்றனர்; சிலர் இறந்து விட்டனர். இதையடுத்து, 431 பேர் தொடர்ந்து பணி செய்து வந்தனர். இவர்கள் பணி நிரந்தரம் கோரி, 2018ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நிரந்தரம் செய்ய, 2023ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், பணி நிரந்தரம் செய்யாமல் மாநகராட்சி இழுத்தடித்ததால், பாதிக்கப்பட்டோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, 433 ஊழியர்களில், 262 பேர் முதற்கட்டமாக பணி நிரந்தரம் செய்து, மாநகராட்சி நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை