உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சொத்து பிரச்னை அடிதடி இருவருக்கு சிறை

சொத்து பிரச்னை அடிதடி இருவருக்கு சிறை

அயனாவரம், நஅயனாவரம் பொண்ணு வேலுபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் அன்பரசு, 46. இவரது வீட்டின் கீழ் தளத்தில் முனீஸ்வரன், 30, அவரது அண்ணன் கருணாகரன், 61, ஆகியோர் வசிக்கின்றனர்.இவர்கள் வசிக்கும் வீடு சொத்து பிரச்னை இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக அடிக்கடி இவர்களுக்குள், தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இரு நாட்களுக்கு முன், சொத்து பிரச்னையால் ஏற்பட்ட வாய் தகராறில் அன்பரசுவை, முனீஸ்வரன் மற்றும் கருணாகரன் ஆகியோர் இரும்புக் கம்பியால் தாக்கி உள்ளனர்சம்பவம் தொடர்பாக அயனாவரம் போலீசார் வழக்கு பதிந்து முனீஸ்வரன் மற்றும் கருணாகரனை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !