வீரர்கள் கூட்டு பயிற்சி முடிந்து புறப்பட்டது ஜப்பான் கப்பல்
சென்னை, சென்னைத் துறைமுகம் வந்த ஜப்பான் நாட்டின் கடலோர காவல் படை கப்பல், கூட்டு பயிற்சி முடிந்து, நேற்று புறப்பட்டு சென்றது.ஜப்பான் நாட்டு கடலோர காவல்படையின், 'இட்ஷூ குஷிமா' என்ற கப்பல், இம்மாதம் 7 ம் தேதி சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. கேப்டன் நாஓகி மிஜோகுச்சி உள்ளிட்ட வீரர்களும் வந்திருந்தனர்.இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி, கூடுதல் தலைமை இயக்குநர் டோனி மைக்கேல் ஆகியோர், ஜப்பான் கடலோர காவல் படை கப்பல் கேப்டன் நாஓகி மிஜோகுச்சியுடன் ஆலோசனை நடத்தினர்.இந்திய கடலோர காவல் படையுடன் சேர்ந்து, கடல் சார் பாதுகாப்பு குறித்து ஆலோசனை மற்றும் கூட்டு பயிற்சி மேற்கொண்டனர்.இந்த சந்திப்பு, இருநாடுகளிடையேயான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்ததாக, கடலோர காவல் படை அதிகாரிகள் கூறினர்.ஜப்பான் கடலோர காவல் படை கப்பல் இட்ஷூ குஷிமா, சென்னை துறைமுகத்தில் இருந்து நேற்று புறப்பட்டு சென்றது.