உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜெயச்சந்திரன் புதிய கிளை கீழ்க்கட்டளையில் திறப்பு

ஜெயச்சந்திரன் புதிய கிளை கீழ்க்கட்டளையில் திறப்பு

கீழ்க்கட்டளை:'ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்' நிறுவனத்தின் புதிய கிளை, கீழ்க்கட்டளையில் நேற்று திறக்கப்பட்டது. 1,000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குவோருக்கு கார், பைக், சைக்கிள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது . சென்னையில் தி.நகர், தாம்பரம், பள்ளிக்கரணை உட்பட நான்கு இடங்களில், 'ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்' கடை, சிறப்பாக இயங்கி வருகிறது. இதன் புதிய கிளை, கீழ்க்கட்டளையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. நிறுவனத்தின் தலைவர் ஜெயச்சந்திரன், அவரது மனைவி ஜெய ஜானகி, நிர்வாக இயக்குநர்கள் சுந்தரலிங்கம் மற்றும் சரவணன் சந்திரன் ஆகியோர் இணைந்து, 'ரிப்பன்' வெட்டியும், குத்து விளக்கேற்றியும் விற்பனையை துவக்கினர். மொத்தம் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில், நான்கு தளங்கள் மற்றும் வாகன நிறுத்தம் வசதியுடன், இக்கடை அமைக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் ஏராளமானோர் குடும்பத்தினருடன் வந்து, பொருட்களை உற்சாகமாக வாங்கிச் சென்றனர். நிர்வாக இயக்குநர் சுந்தரலிங்கம் கூறியதாவது: ஜவுளி, தங்க நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில், கீழ்க்கட்டளையில் புதிய கிளை திறக்கப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டுச்சேலைகள் உட்பட அனைத்து வகையான சேலைகள் மற்றும் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப் படுகிறது. பிரத்யேக சலுகையாக, ஒரு சவரன் தங்க நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் 4,000 ரூபாய் மதிப்புள்ள ஆடைகளை இலவசமாக பெறலாம். சிறப்பு சலுகையாக, 1,000 ரூபாய்க்கு மேல் துணி வாங்குவோருக்கு 'கூப்பன்' வழங்கப்பட்டு, அதில் சிறந்த வாசகம் எழுதுவோருக்கு முதல் பரிசாக கார், இருசக்கர வாகனம், சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள், 1,000 பேருக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ