உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நகை மோசடி வழக்கில் ஜுவல்லரி ஓனர் கைது

நகை மோசடி வழக்கில் ஜுவல்லரி ஓனர் கைது

திரு.வி.க.நகர்,புழல், ரெட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் வரலட்சுமி, 57. இவர், கடந்த 2017ம் ஆண்டு, 45 சவரன் பழைய தங்க நகைகள் மற்றும் 8 லட்ச ரூபாயை, பெரம்பூரில் உள்ள மகா ஜுவல்லரி கடை உரிமையாளர் சரவணகுமாரிடம் கொடுத்து, புதிய நகைக்கு 'ஆர்டர்' கொடுத்துள்ளார்.ஆனால், ஏழு ஆண்டுகளாகியும் புதிய நகைகளை சரவணகுமார் தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வரலட்சுமி, கடந்த 2ம் தேதி திரு.வி.க.நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி விசாரித்த போலீசார், பெரம்பூர் பேப்பர்மில்ஸ் சாலை, வீனஸ் மார்க்கெட் தெருவைச் சேர்ந்த சரணகுமாரை, 42, நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ