மேலும் செய்திகள்
பீரோவில் இருந்த நகை மாயம் போலீஸ் விசாரணை
17-Nov-2024
சென்னை, நடிகை சீதா வீட்டில், 4.5 சவரன் நகை திருடுபோனது தொடர்பாக, விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சாலிகிராமம், புஷ்பா காலனியில் வசித்து வருபவர் சினிமா நடிகை சீதா, 56. கடந்த செப்., 30ல், அவரது வீட்டிற்கு வந்த தம்பியின் மனைவி கல்பனா, தான் அணிந்து இருந்த கம்மல் மற்றும் செயினை கழற்றி கை பையில் வைத்துவிட்டு உறங்கச் சென்றார்.மறுநாள் காலை எழுந்து கை பையை பார்த்தபோது, 4.5 சவரன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து, நடிகை சீதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், நேற்று புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
17-Nov-2024