உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வெல்டிங் பணியில் விபத்து ஜார்க்கண்ட் வாலிபர் காயம்

வெல்டிங் பணியில் விபத்து ஜார்க்கண்ட் வாலிபர் காயம்

மாதவரம் மாதவரம், கணபதி நகரில் வெங்கடேசன் என்பவர், கடந்த 10 ஆண்டுகளாக, வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இங்கு, டேங்கர் லாரிகளை பழுது பார்த்து, கசிவு இருந்தால் வெல்டிங் வாயிலாக சரி செய்யப்படும்.இந்த வெல்டிங் பட்டறையில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்கிஷோர் விஸ்வகர்மா, 29, என்பவர், கடந்த இரு மாதங்களுக்கு முன், வெல்டராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு, பழுது நீக்க வந்த தண்ணீர் டேங்கர் லாரியில், ராஜ்கிஷோர் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அதில் உள்ள கேஸ் கசிந்து வெடித்தது.இதில், ராஜ்கிஷோர் விஸ்வகர்மாவுக்கு வயிறு, முகம், கை ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்தார்.உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.தகவல் அறிந்த மாதவரம் காவல் நிலைய போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை