உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சணல் பொருட்கள் விற்பனை கண்காட்சி துவக்கம்

சணல் பொருட்கள் விற்பனை கண்காட்சி துவக்கம்

சென்னை, மத்திய ஜவுளித் துறையின்கீழ் இயங்கும் தேசிய சணல் வாரியம் சார்பில், ஒரு வார சணல் பொருட்கள் விற்பனை கண்காட்சி, சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள வர்த்தகர் அறக்கட்டளை மண்டபத்தில் நேற்று துவங்கியது.தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புதுமை நிறுவன இயக்குனர் அம்பலவாணன், கண்காட்சியை துவக்கி வைத்து பேசியதாவது:இந்தியாவின் தங்க நார் எனப்படும் 'சணல்' தாவரத்தில் இருந்து தயாராவதால், சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பிளாஸ்டிக் பொருட்கள் மக்க ஆயிரம் ஆண்டுகள் ஆகும்; சணல் பொருட்கள் எளிதில் மக்கும். தமிழகத்தில், சணல் பொருட்கள் விற்பனை லாபகரமாக்கும் வகையில், வேலைவாய்ப்பு, பயிற்சி திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். தொழில் முனைவோருடன் சேர்ந்து, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு சணல் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.தேசிய சணல் வாரிய, முன்னாள் தலைமை வர்த்தக பிரிவு அதிகாரி அய்யப்பன் கூறுகையில், ''உலகம் முழுதும், சணல் தரை விரிப்புகள் ஏற்றுமதி செய்வதில், கேரளா முதல் இடம் வகிக்கிறது. சணல் பொருட்கள் சந்தைப்படுத்துதலில், தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது,'' என்றார்.தென்னிந்திய சணல் உற்பத்தியாளர்கள் சங்க செயலர் சீனிவாசன் கூறுகையில், ''போலியான சணல் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில், உண்மையான சணல் பொருட்களுக்கான, 'லோகோ'வை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். அவை பொருட்களில் ஒட்டப்பட்ட பிறகே விற்பனைக்கு வரும். மக்கள் ஏமாற தேவையில்லை,'' என்றார்.தமிழகம், உ.பி., - தெலுங்கானா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 20 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. சணல் அணிகலன்கள், காலணிகள், காதணிகள், மணிபர்ஸ், சுவர் அலங்காரங்கள், பொம்மைகள், தரைவிரிப்புகள், தாம்பூலம் பேக் உள்ளிட்ட பல பொருட்கள் உள்ளன. கண்காட்சியில், 10 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையிலான சணல் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.கண்காட்சி வரும் 24ம் தேதி வரை, காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கும். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.★★*


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை