உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கைலாசபுரம் நகர்புற குடியிருப்பு நான்கு ஆண்டுக்குபின் திறப்பு

கைலாசபுரம் நகர்புற குடியிருப்பு நான்கு ஆண்டுக்குபின் திறப்பு

தண்டையார்பேட்டைசென்னை தண்டையார்பேட்டை, கைலாசபுரம் பகுதியில், 50 ஆண்டுகளுக்கு மேலாக, 300க்கும் மேற்பட்டோர் குடிசை, தகர செட்டுகளில் வீடுகள் அமைத்து வாழ்ந்து வந்தனர்.எவ்வித அடிப்படை வசதிகள் இல்லாததால், மழைக்காலங்களில் பெரிதும் அவதிப்பட்டனர்.இதையடுத்து, 2019ல், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 63.34 கோடி ரூபாயில், குடியிருப்புகள் கட்டித்தர முடிவானது.இதற்காக அனைத்து குடிசை, தகர ஷீட் குடியிருப்புகள் இடிக்கப்பட்டன.தரை தள பார்க்கிங் வசதியுடன், 14 மாடிகளில், 392 குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடந்தன. ஒவ்வொரு வீடும் 400 சதுர அடியில் கட்டப்பட்டன.கடந்த 2021ல் கட்டுமான பணிகள் முடிந்தன. ஆனால், நான்கு ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் இருந்தது.இந்த குடியிருப்புகளை, முதல்வர் ஸ்டான்லின் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி