மேலும் செய்திகள்
70 இடங்களில்சுரங்கப்பாதை தெற்கு ரயில்வே திட்டம்
19-Apr-2025
சென்னை, சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் -- சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில், அயனாவரம் -- பெரம்பூர் இடையே, 867 மீட்டர் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி, கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் துவங்கியது.இப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட ராட்சத இயந்திரத்துக்கு 'கல்வராயன்' என பெயரிடப்பட்டு, பணிகளை மேற்கொண்டு வந்தது.இருப்பினும், நிலைய சுற்றுச்சுவர் கட்டுமானத்தில் ஏற்பட்ட தாமதத்தால், இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம், பெரம்பூர் நிலையத்தை அடைவதில் தாமதம் ஏற்பட்டது.இந்நிலையில், சுரங்கம் தோண்டும் பணியை தடைகளை தாண்டி வெற்றிகரமாக முடித்த கல்வராயன் இயந்திரம், நேற்று முன்தினம் பெரம்பூர் நிலையத்தை வந்தடைந்தது.32 ஆழ்துளை கிணறுஇது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ., துாரத்துக்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு, இதற்காக ஏழு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.அயனாவரம் மற்றும் பெரம்பூர் இடையிலான சுரங்கப்பாதை பிரிவு, மிகவும் சிக்கலான சுரங்கப்பாதை பிரிவாகும். இதில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் கல்வராயன், பெரம்பூர் ரயில்வே நிலையத்தின் பாதைகள், நிலையங்களை மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளைக் கடந்து செல்வது போன்ற பெரும் சவால்களையும், 32க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை கடந்து, மக்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் சுரங்கும் தோண்டும் பணியை நிறைவு செய்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
19-Apr-2025