உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மூத்தோர் தடகள போட்டி :16 பதக்கம் வென்ற காஞ்சி

 மூத்தோர் தடகள போட்டி :16 பதக்கம் வென்ற காஞ்சி

சென்னை: தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கம் சார்பில், 43வது மாநில அளவிலான விளையாட்டு போட்டி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில், டிச., 20, 21 ஆகிய இரு நாட்கள் நடத்தப்பட்டன. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்ட மூத்தோர் தடகள சங்க செயலர் திருலோகச்சந்திர ன் தலைமையில், 35 பேர் பங்கேற்றனர். அவர்களில், 30 முதல் 85 வயது வரை உள்ள, 16 பேர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இதில், 5 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்கள் அடங்கும். மாநில அளவிலான போட்டியில் சாதனை படைத்துள்ள இவர்கள், கேரளாவில், பிப்., 28 முதல் மார்ச் 1 வரை நடைபெற உள்ள தேசிய மூத்தோர் தடகள போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை