உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கந்தசஷ்டி விழா கோலாகலம்

கந்தசஷ்டி விழா கோலாகலம்

பெரம்பூர்: பெரம்பூர், அகரத்தில் உள்ள ஆறுமுக சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா, வெகு விமரிசையாக நடந்தது. அகரம், பல்லார்டு சந்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ ஆறுமுக சுவாமி கோவிலில், கடந்த 27ம் தேதி கந்தசஷ்டி விழாவையொட்டி, விளக்கு பூஜையும், சூரசம்ஹாரமும் நடந்தன. இதை தொடர்ந்து சுவாமி வீதிஉலா நடைபெற்றது. மறுநாள் 28ம் தேதி, ஆறுமுக சுவாமிக்கு திருகல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா முடிவில், பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தினர் விருந்து படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை