உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணை ஏமாற்றி திருட்டு கன்னியாகுமரி நபர் சிக்கினார்

பெண்ணை ஏமாற்றி திருட்டு கன்னியாகுமரி நபர் சிக்கினார்

திரு.வி.க.நகர்,திரு.வி.க.நகரைச் சேர்ந்தவர் சாரதா, 52. இவர், வில்லிவாக்கத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணி புரிகிறார். இவருக்கு, சில மாதத்திற்கு முன் முகநுால் வாயிலாக, சிவா என்ற வாலிபர் பழக்கமாகியுள்ளார்.நட்பாக பழகிய நிலையில், நவ., 27ம் தேதி காலை 8:00 மணியளவில், சாரதாவின் வீட்டிற்கு சிவா சென்றுள்ளார். இருவரும் சிறிது நேரம் பேசிய நிலையில், சாரதா குளிக்க சென்றுள்ளார். அந்நேரம், வீட்டில் இருந்த 8 சவரன் நகைகளுடன் சிவா மாயமானார்.இது குறித்து திரு.வி.க.நகர் போலீசார் விசாரித்தனர். இதில், கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த அய்யப்பன், 39, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 21 கிராம் நகைகளை பறிமுதல் செய்தனர். இவர் மீது கோவை மற்றும் மதுரை காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !