மேலும் செய்திகள்
மயிலம் தமிழ் கல்லுாரியில் திறன் மேம்பாடு பயிற்சி
26-Jun-2025
சென்னை, கொளத்துார் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் ஐந்தாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவின், உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வான 11 பேருக்கும், கண்காணிப்பாளர் பணிக்கு தேர்வான ஒருவருக்கும் பணி நியமன ஆணைகளை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன் ஆகியோர் வழங்கினர். மேலும், 762 மாணவ - மாணவியருக்கு, கல்வி ஊக்கத்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் அடங்கிய புத்தகப்பை வழங்கப்பட்டது. விழாவில், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமை செயலர் மணிவாசன், கமிஷனர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
26-Jun-2025