போதை பொருளுடன் சுற்றிய கர்நாடக வாலிபர் கைது
கீழ்ப்பாக்கம்,சென்னை பெருநகர் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு தனிப்படை போலீசாருக்கு, கீழ்ப்பாக்கத்தில் போதை பொருளுடன் வாலிபர் சுற்றுவதாக, ரகசிய தகவல் கிடைத்தது.அதன்படி, நேற்று காலை கீழ்ப்பாக்கம் போலீசார், கொங்குரெட்டி சுரங்கப் பாலம் அருகே கண்காணித்தனர்.அப்போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.அவரை சோதித்த போது, அவரிடம் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள் இருந்தது தெரிந்தது.விசாரணையில், கர்நாடக மாநிலம், பெங்களூரு பகுதியைச் சேர்ந்த ஜீவா, 23, என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 29 கிராம் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.