காஷ்மீர் இ ளைஞர்களின் கலை நிகழ்ச்சி
சென்னை, நாட்டில் கலவரங்கள் நடக்கும் பகுதிகளில் உள்ள இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில், மத்திய உள்துறை அமைச்சகம், கலாசாரம், கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகங்களுடன் இணைந்து, அவர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது.அந்த வகையில், காஷ்மீரில் தீவிரவாதம் உள்ள அனந்தநாக், குப்வாரா, பாரமுல்லா, புத்காம், ஸ்ரீநகர், புல்வாமா உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 132 இளைஞர்களை தேர்வு செய்து, நேரு யுவகேந்திராவின் சார்பில், இன்று முதல் ஏழு நாட்களுக்கு, சென்னையில் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.அடையாறு இளைஞர் விடுதியில், இன்று காலை 9:00 மணிக்கு, தென் சென்னை எம்.பி., தமிழச்சி துவக்கி வைக்கிறார். இதில், காஷ்மீர் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இதேபோல், தினமும் மாலையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.இதில் பங்கேற்றுள்ள இளைஞர்களுக்கு உடற்பயிற்சி, உணவு திருவிழா, தொழில் பயிற்சிகள், வங்கிக்கடன் பெறும் வழிமுறைகள், கல்லுாரிகளில் தேசப்பக்தி குறித்த கருத்தரங்குள் உள்ளிட்டவை நடக்க உள்ளன.