மேலும் செய்திகள்
விலை உயர்ந்த வெண்டைக்காய்
29-Oct-2025
காசிமேடு: மீன்களின் வரத்து அதிகரிப்பால், காசிமேடு மீன் சந்தை களைகட்டியது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 70க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று கரை திரும்பின. பெரிய வகை மற்றும் சிறிய வகை மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின் மக்களின் கூட்டமும் அதிகமாக இருந்தது. திருவிழா கூட்டம்போல காட்சியளித்த காசிமேடு சந்தையில், வஞ்சிரம், வவ்வால், கடம்பா, வாளை, முளியன், திருக்கை, சங்கரா, பால் சுறா, பாறை உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது. இதன் காரணமாக, கடந்த வாரம் கிலோ 1,400 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட வஞ்சிரம் மீன், நேற்று 1,000 முதல் 1,200 ரூபாய் வரை விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதேபோல மற்ற மீன்களின் விலையும் சற்று குறைவாக இருந்தது. வரத்து அதிகரிப்பால் தங்களுக்கு பிடித்தமான மீன்களை மக்கள் போட்டி போட்டு பேரம் பேசி வாங்கி சென்றனர்.
29-Oct-2025