உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மண்ணெண்ணெய் குண்டு வீச்சு

மண்ணெண்ணெய் குண்டு வீச்சு

வியாசர்பாடி: கொடுங்கையூர், கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த், 24. இவர், சோமசுந்தரம் என்பவருக்கு சொந்தமான வீட்டின் கீழ்தளத்தில், ஐந்து ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வருகிறார். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, வீட்டின் இரும்பு கேட் முன், குண்டு போட்டது போல் சத்தம் கேட்டது. வெளியே சென்று சோமசுந்தரம் பார்த்தபோது, பீர்பாட்டில் உடைந்து துண்டுகளாக கிடந்ததோடு, தீப்பற்றியதற்கான தடங்கள் இருந்தன; மண்ணெண்ணெய் நாற்றமும் அடித்தது. சோமசுந்தரம் தகவலையடுத்து வந்த கொடுங்கையூர் போலீசார் விசாரணையில், வீட்டின் முன் பெட்ரோல் குண்டு போல் மண்ணெண்ணெய் குண்டை வெடிக்கச் செய்தது தெரியவந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்