கிக்பாக்சிங் இந்தியன் லீக் சென்னை அசத்தல்
சென்னை, 'புரோ ஓபன் கிக்பாக்சிங் இந்தியன் லீக்' போட்டிகள், கர்நாடகாவில், நான்கு நாட்கள் நடந்தன.பல மாநிலங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். தமிழகம் சார்பில், சென்னையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணா மற்றும் சையது சாதீக் ஆகியோர் பங்கேற்றனர். இதில், 60 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில், தமிழகத்தின் கோபாலகிருஷ்ணா, ஆந்திரா வீரர் நரேஷ் செட்டியை வீழ்த்தி தங்கம் வென்றார். மற்றொரு தமிழக வீரர் சையது தாதீக், 70 கிலோ எடை பிரிவில், மூன்றாம் இடத்தை பிடித்தார்.