உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜிபேவில் ரூ.20,000 வாங்கிய எஸ்.ஐ.,யிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

ஜிபேவில் ரூ.20,000 வாங்கிய எஸ்.ஐ.,யிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

கே.கே., நகர், வீட்டில் மாயமான நகை குறித்து புகாரளித்த தம்பதியிடம், போலீஸ் எஸ்.ஐ., பணம் பெற்றதாக எழுந்த புகார் குறித்து, உயரதிகாரிகள் விசாரிக்கின்றனர்.வடபழனி ஏ.வி.எம்., குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜனனி, 36. இவரது கணவர் சங்கர், வளசரவாக்கத்தில் ஐ.டி., நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களது வீட்டின் பீரோவில் இருந்த, 40 சவரன் நகை, கடந்த மாதம் 3ம் தேதி மாயமானது.பணிப்பெண் திலகவதி மற்றும் வீட்டிற்கு யோகா பயிற்சி அளிக்க வரும், காயத்ரி ஆகியோரிடம் விசாரித்துள்ளனர்.ஆனாலும் நகை கிடைக்காததால், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.அங்கிருந்து கடந்த 30ம் தேதி, கே.கே., நகர் குற்றப் பிரிவிற்கு புகார் மாற்றப்பட்டது. இதுகுறித்து, கே.கே., நகர் குற்றப்பிரிவு எஸ்.ஐ., ராஜேந்திரன், ஜனனி மற்றும் அவரது கணவர் சங்கரிடம் விசாரித்துள்ளார். அப்போது சங்கரிடம், எஸ்.ஐ., ராஜேந்திரன் பணம் கேட்டுள்ளார். இதையடுத்து, எஸ்.ஐ.,யின் 'ஜிபே' எண்ணிற்கு சங்கர், 20,000 ரூபாய் அனுப்பியுள்ளார்.இதையடுத்து, கடந்த 1ம் தேதி நகை குறித்து எஸ்.ஐ.,யிடம் தம்பதி கேட்டுள்ளனர். அவர் சரியான பதில் அளிக்காததால், மீண்டும் போலீஸ் கமிஷனர் அலுவலகம் செல்வதாக கூறியுள்ளனர்.அதன்படி எஸ்.ஐ., ராஜேந்திரன், 'ஜிபே'வில் வாங்கிய பணத்தை, சங்கருக்கு திரும்பி அனுப்பியுள்ளார். இதுகுறித்து தம்பதி, தி.நகர் துணை கமிஷனரிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து உயரதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை