உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வெள்ளரிக்காய் நறுக்கி தராத நண்பருக்கு கத்திக்குத்து

வெள்ளரிக்காய் நறுக்கி தராத நண்பருக்கு கத்திக்குத்து

சென்னை, உ.பி., மாநிலத்தைச் சேர்ந்தோர் விஜய் குஷ்வாகா, 40, சுப்ரீம், 33; மாற்றுத்திறனாளிகள். உறவினர்களான இருவரும், சென்னை ஜாம்பஜாரைச் சேர்ந்த ரகுமான் என்பவரது அலுவலகத்திலேயே தங்கி, தச்சு வேலை செய்து வந்தனர்.நேற்று அதிகாலை சுப்ரீம், வெள்ளரிக்காயை வெட்டி தரும்படி விஜய் குஷ்வாகாவிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்ததால், இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.பின், காய்கறி வெட்டும் கத்தியால் அவரது கழுத்து, இடது கை தோள் பட்டையில் வெட்டி, சுப்ரீம் தப்பிச் சென்றார்.ரத்தம் வடிந்த நிலையில், அண்ணா சாலை நடைபாதையில் உள்ளாடையுடன் அமர்ந்திருந்த விஜய்குஷ்வாகாவை பார்த்த அவ்வழியே சென்றோர், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.தொடர்ந்து, '108' ஆம்புலன்ஸ் வாகனம் வாயிலாக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய சுப்ரீம் மொபைல் போன் டவரை ஆய்வு செய்ததில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருப்பது தெரியவந்தது. உடனே, அங்கு சென்ற போலீசார், உ.பி., மாநிலத்திற்கு செல்லும் ரயிலில் மாற்றுத்திறனாளிக்கான இருக்கையில் அமர்ந்திருந்த சுப்ரீமை பிடித்து, அழைத்துச் சென்றனர்.விசாரணையில், வெள்ளரிக்காய் வெட்டுவதில் ஏற்பட்ட தகராறில், விஜய்குஷ்வாகாவின் கழுத்தை வெட்டியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ