உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மகளிர் தின பேச்சுப்போட்டியில் கொளத்துார் மாணவிக்கு முதல் பரிசு

மகளிர் தின பேச்சுப்போட்டியில் கொளத்துார் மாணவிக்கு முதல் பரிசு

சென்னை, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஏற்பாடு செய்த, சென்னை கல்லுாரி மாணவியருக்கான 'தமிழ் மகள்' எனும் தலைப்பில் நடந்த பேச்சுப்போட்டியில், கொளத்துார் அனிதா அச்சிவர்ஸ் அகாடமி மாணவி துர்கா முதலிடம் பிடித்து, ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்றார். மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை மேயர் பிரியா, 'தமிழ் மகள்' என்ற தலைப்பில், சென்னை கல்லுாரி மாணவியருக்கான பேச்சுப் போட்டியை அறிவித்தார். இதில், 2,000க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர். இதில், கொளத்துார் அனிதா அச்சிவர்ஸ் அகாடமியை சேர்ந்த மாணவி துர்கா, 'பெண்ணின்றி அமையாது உலகு' என்ற தலைப்பில் பேசி முதலிடம் பிடித்தார். அவரைத்தொடர்ந்து, டி.ஜி.வைஷ்ணவ் கல்லுாரி மாணவி கயல்விழி, 'போர்த்தொழில் பழகு' என்ற தலைப்பில் பேசி, இரண்டாம் இடத்தையும், காயிதே மில்லத் அரசினர் மகளிர் கல்லுாரி மாணவி லோகிதா மூன்றாம் இடத்தையும் பெற்றனர். நேற்றைய விழாவில், முதல்பரிசாக, 1 லட்சம் ரூபாய்; இரண்டாம் பரிசாக 75,000; மூன்றாம் பரிசாக 50,00 ரூபாய்க்கான காசோலை பரிசாக வழங்கப்பட்டது. வெற்றியாளருக்கு, 'தமிழ் மகள்' என்ற பட்டமும் வழங்கப்பட்டது. முன்னாள் நீதிபதி வாசுகி, ஆனந்தி, இஸ்ரோ விஞ்ஞானி தேன்மொழிசெல்வி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். முன்னாள் நீதிபதி விமலா, பேச்சாளர் பாரதி பாஸ்கர், பெமினைன் கோமதி ஆகியோர் வாழ்த்தினர். அமைச்சர் சேகர்பாபு, மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சரவணன், பாடலாசிரியர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி