கோடி அர்ச்சனை பெருவிழா
பாரிமுனை: பூங்கா நகரில் கந்தகோட்டம் கந்தசுவாமி கோவில் என அழைக்கப்படும் முத்துக்குமார சுவாமி தேவஸ்தானம் உள்ளது. இங்கு கந்த சஷ்டி திருவிழா 22ம் தேதி கோலாகலமாக துவங்கியது. 5வது நாளான நேற்று காலை முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேமும், தொடர்ந்து கோடி அர்ச்சனை பெருவிழாவும் நடந்தன. இதில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் சுவாமி வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான, இன்று மாலை 6:00 மணிக்கு சூரசம்ஹார விழா நடக்க உள்ளது. நாளை மாலை திருக்கல்யாண உத்சவம் நடக்கிறது. இதற்கான பட்டு வஸ்திரம் திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து தர உள்ளனர். இதில் திரளாக பங்கேற்பர் என்பதால், பக்தர்களுக்கான சிறப்பு வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.