உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 2 ஆண்டுகளாக சீர்குலைந்துள்ள கோயம்பேடு ரவுண்டானா பூங்கா

2 ஆண்டுகளாக சீர்குலைந்துள்ள கோயம்பேடு ரவுண்டானா பூங்கா

கோயம்பேடு, கோயம்பேடு மேம்பாலம் ரவுண்டானாவின் கீழே, கட்டட கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டிருந்தன. மேலும், பிளாஸ்டிக் பொருட்களும், பயன்படுத்தப்பட்ட 'டயர்'களும் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்தன.இவற்றை அகற்றி, ரவுண்டானாவை அழகுபடுத்த வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, கடந்த 2022ம் ஆண்டு, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 50 லட்சம் ரூபாய் செலவில், 40,000 சதுர அடி பரப்பில், செயற்கை நீரூற்றுடன் பூங்கா அமைக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு, குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக, ரவுண்டானா பூங்காவில் பள்ளம் தோண்டப்பட்டது. இதனால், பூங்கா பொலிவிழந்து காணப்பட்டது. இதுகுறித்தும், நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, குடிநீர் வாரிய பணிகள் முடிந்த பின், பூங்கா சீரமைக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்தது. ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும், இன்னும் பூங்கா சீரமைக்கப்படவில்லை. இதனால், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ''பூங்கா அமைந்துள்ள ரவுண்டானா பகுதி, நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ளது. பூங்காவை மாநகராட்சி சார்பில் சீர் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், நெடுஞ்சாலை துறையினர், அவர்களே பூங்காவை சீர் செய்வதாக கூறியுள்ளனர்,” என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ