உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஊத்துக்கோட்டை வருகிறது கிருஷ்ணா நீர்

ஊத்துக்கோட்டை வருகிறது கிருஷ்ணா நீர்

ஊத்துக்கோட்டை:புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், தேர்வாய்கண்டிகை உள்ளிட்ட நீர்நிலைகளில், நீர்மட்டம் குறைவாக இருந்தது. இதன் காரணமாக, ஒப்பந்தப்படி கண்டலேறு அணைக்கட்டில் இருந்து கிருஷ்ணா நீர், கடந்த 19ம் தேதி காலை 11:00 மணிக்கு வினாடிக்கு, 500 கன அடி வீதம் திறக்கப்பட்டது. தற்போது, 1,200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, 152 கி.மீ., வழிந்தோடி, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டை இன்று காலை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகம் வரும் கிருஷ்ணா நீரை வரவேற்க, தமிழக நீர்வள ஆதாரத்துறையினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !