தேசிய கராத்தே போட்டியில் 21 பதக்கம் கூடுவாஞ்சேரி அகாடமி வீரர்கள் அசத்தல்
சென்னை:சர்வதேச மன்சூரியா குங்பூ அகாடமி சார்பில், வண்டலுார் அடுத்த மேலக்கோட்டையூர், வி.ஐ.டி., பல்கலையில், கடந்த வாரம் இரு நாட்கள், தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடந்தன.இதில் தமிழகம், புதுச்சேரி, மணிப்பூர், அசாம், திரிபுரா, ஒடிசா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.இதில், கூடுவாஞ்சேரி அடுத்த விஷ்ணு பிரியா நகரில் உள்ள 'டங்சூடூ' கராத்தே அகாடமி சார்பில் பங்கேற்ற மாணவர்கள், எட்டு தங்கம், ஏழு வெள்ளி, ஆறு வெண்கலம் என, 21 பதக்கங்களை வென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு, கூடுவாஞ்சேரி தலைமை பயிற்சி நிலையத்தில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.விழாவில், போதி தர்மா கிராண்ட் மாஸ்டர் பாண்டியன், 'டங்சூடூ' அகாடமியின் ஒருங்கிணைப்பாளர் ஹைதர்அலி உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்று, பதக்கம், கேடயம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.