உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சக்ர விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

சக்ர விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

தி.நகர், பிரசித்தி பெற்ற, தி.நகர் சக்ர விநாயகர் கோவில் கும்பாபி ேஷகம் நேற்று விமரிசையாக நடந்தது. தி.நகர் தெற்கு தண்டபாணி தெருவில், 75 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ சக்ர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மஹா கும்பாபிஷேக விழாவிற்காக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 18ம் தேதி காலை 7:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புன்னியாஹவாசனம், மஹா கணபதி ேஹாமத்துடன் கும்பாபிஷேக விழா துவக்கியது. தொடர்ந்து 19 ம் தேதி மாலை முதல் கால யாக பூஜைகள் நடந்தன. 20 ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், பூர்ணாஹூதி மற்றும் மாலை மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, 7:35 மணிக்கு கோ பூஜைலநடந்தது. தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு விமான மஹா கும்பாபிஷேகம், மூலவர் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 9:20 மணியளவில் மஹா பூர்ணாஹூதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு மூலவர் அபிஷேகம் ஆகியவை நடந்தன. கும்பாபிஷேகம் காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால், தண்டபாணி தெருவில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. பின், மாலை 6:00 மணியளவில் சக்ர விநாயகர், சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை