உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஸ்ரீதேவி புற்றுக்கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

ஸ்ரீதேவி புற்றுக்கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

செம்பாக்கம், ;சேலையூரை அடுத்த மகாலட்சுமி நகரில், 49 ஆண்டுகள் பழமையான, ஸ்ரீதேவி கருமாரியம்மன் புற்றுக்கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், நேற்று வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக, நேற்று காலை, 5:30 மணிக்கு விநாயகர் பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, தெய்வ விக்ரஹங்களுக்கு காப்பு பட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு, கலசங்களுக்கு கும்பநீர் சேர்த்து, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிப்பட்டனர்.தொடர்ந்து, மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி