உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பூந்தமல்லி தி.மு.க.,வில் கோஷ்டி பூசலால் புலம்பல்

பூந்தமல்லி தி.மு.க.,வில் கோஷ்டி பூசலால் புலம்பல்

பூந்தமல்லி, :'ஓரணியில் தமிழ்நாடு' எனும் பெயரில், தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை நடந்து வரும் நிலையில், பூந்தமல்லி தி.மு.க., நிர்வாகிகள் பல அணிகளாக பிரிந்து கிடப்பதால், பூந்தமல்லி நகராட்சியில் வளர்ச்சி பணிகள் பாதிப்படைகின்றன.குறிப்பாக, மாவட்ட செயலரும், அமைச்சருமான நாசரின் ஆதரவாளர்கள் ஓரணியாகவும், பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள் ஓரணியாகவும், நகராட்சி தலைவர் காஞ்சனா சுதாகர் ஓரணியாகவும், நகர செயலர் திருமலை ஓரணியாகவும் பிரிந்து கிடக்கின்றனர்.இவர்கள், நகராட்சியின் 'டெண்டர்' உள்ளிட்ட பல்வேறு நிர்வாக விஷயங்களில் தலையிடுவதால், நகராட்சியின் வளர்ச்சி பணிகள் பாதிப்படைகின்றன.இந்நிலையில், பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பைபாஸ் சாலையில், வெளியூர் பேருந்து நிறுத்தத்தில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில் பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜை, நேற்று தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி தலைமையில் நடந்தது.இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத் தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் வருவதற்கு முன்பாகவே, எம்.எல்.ஏ., துவக்கி வைத்துவிட்டு புறப்பட்டார்.இதை பார்த்த கட்சியினர், 'ஓரணியில் தமிழ்நாடு' என தலைவர் கூறிக்கொண்டிருக்க, பூந்தமல்லியில் தி.மு.க., பல அணிகளாக பிளவுபட்டு, நிர்வாகிகளிடையே கோஷ்டி பூசல் இருப்பது சமீப காலமாக வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.பூந்தமல்லி தி.மு.க.,வினர் பல அணிகளாக உள்ளதால், அதன் பாதிப்பு தேர்தல் நேரத்தில் தான் தெரியும் என, அக்கட்சியினரே முணுமுணுத்தவாறு புலம்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ