மேலும் செய்திகள்
டீ கடைக்காரருக்கு வெட்டு இளநீர் கடைக்காரர் கைது
25-Jul-2025
கோயம்பேடு, மொழி தெரியாத வடமாநில வாலிபருடன் ஏற்பட்ட தகராறு, பக்கத்து கடைக்காரருடன் கைகலப்பாக மாறியது. நெற்குன்றம், என்.டி.படேல் சாலையில் காய்கறி கடை நடத்தி வருபவர் தேவராஜ், 39. இவரது கடைக்கு, நேற்று முன்தினம் இரவு, வடமாநில வாலிபர் ஒருவர் வந்துள்ளார். வட மாநில வாலிபர் சொன்னது தேவராஜிற்கும், தேவராஜ் சொன்னது வடமாநில வாலிபருக்கும் புரியவில்லை. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பக்கத்துக்கடைக்காரர் வெங்கடேஷ், வடமாநில வாலிபருக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதையடுத்து, தேவராஜ் மற்றும் வெங்கடேஷ் இடையே, தகராறு ஏற்பட்டுள்ளது. தேவராஜை, வெங்கடேஷ் தாக்கியுள்ளார். இதில், உதட்டில் காயமடைந்த தேவராஜ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Jul-2025