உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சங்கரா கல்லுாரியில் மொழிவள பயிலரங்கம்

சங்கரா கல்லுாரியில் மொழிவள பயிலரங்கம்

சென்னை, தமிழ் மொழியின் வளம் மற்றும் பிழையின்றி தமிழ் எழுதும் முறை குறித்து, தாம்பரம் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியில், 'மொழி வளப் பயிலரங்கம்' எனும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.காஞ்சி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிகாட்டலில், ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், சென்னை உட்பட பல மாவட்டங்களிலிருந்து 100 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இதில், செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலைவர் சுதா சேஷய்யன், முனைவர்கள் சீனிவாசன், பலராமன், கார்த்திகேயன், தாமரைக்கண்ணன், மாது, ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று, மொழி வளப் பயிற்சி அளித்தனர்.தொன்மையான தமிழ் மொழியின் பெருமை, வளமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் தவிர, ஊடகம் மற்றும் அறிவியலில், தமிழின் வளத்தை புகுத்துவது குறித்தும், பயிற்சி அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் சுதா சேஷய்யன் பேசியதாவது:ஒரு மொழியை, அந்த மொழியில்தான் பேச வேண்டும். பிற மொழி கலந்து பேசக்கூடாது. தாய் மொழியை மதிப்பவர்கள், பிற மொழியையும் மதிப்பர். மாணவர்கள் மத்தியில், தமிழ் மொழியின் பெருமையை உணர்த்துவது அவசியம்.பக்தியையும், தமிழையும் பிரிக்க முடியாது. தமிழின் வளர்ச்சிக்கு பழமை, புதுமை இரண்டும் அவசியம். மொழி உச்சரிப்பிற்கு ஏற்ப பெயரை மாற்றலாம் என, தொல்காப்பியம் கூறுகிறது. இதை ஆழ்வார்களும், நாயன்மார்களும் செயல்படுத்தி உள்ளனர்.துாய தமிழ் எனும்போது, அதை எதிலிருந்து துாய்மைப்படுத்துகிறோம் என்பது முக்கியம். நவீன காலத்திற்கு ஏற்ப, கருத்து ரீதியாகவும் தமிழை எடுத்துச் செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை