படுத்த படுக்கையான மின் பகிர்மான பெட்டி
படுத்த படுக்கையான மின் பகிர்மான பெட்டி
மாதவரம் மண்டலத்திற்கு உட்பட்ட 30வது வார்டில் உள்ள அண்ணா தெரு, சத்தியமூர்த்தி தெரு, காந்தி தெரு உள்ளிட்ட பகுதிகளில், சமீபத்தில் மழைநீர் கால்வாய் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சாலையோரம் இருந்த மின்பகிர்மானப் பெட்டிகள் தள்ளி வைக்கப்பட்டன. மழைநீர் வடிகால்வாய் பணிகள் முடிந்த பிறகு, மின்பகிர்மானப்பெட்டிகளை அப்படியே விட்டதால், அவை சாலையில் விழுந்து கிடக்கின்றன. பல மாதமாகியும் அவை சரி செய்யப்படாமல் உள்ளன. போக்குவரத்துக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறாக உள்ளதோடு, உயிர்பலி ஆபத்தையும் ஏற்படுத்தும் வகையில் உள்ள அவற்றை, மின்வாரியம் சரி செய்ய வேண்டும்.