உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 10ம் வகுப்பு சான்றிதழ் பெற கடைசி வாய்ப்பு

10ம் வகுப்பு சான்றிதழ் பெற கடைசி வாய்ப்பு

சென்னை:'சென்னை மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வெழுதி, இதுவரை அசல் மதிப்பெண் சான்றிதழ் பெறாதவர்கள், வரும் ஜன., 31க்குள் பெற்றுக் கொள்ளலாம்' என, அரசுத் தேர்வுகள் உதவி இயக்கனர் அலுவலகம் அறிவித்துள்ளது.அதன் அறிக்கை:சென்னை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட தனித்தேர்வு மையங்களில், கடந்த 2014 மார்ச் முதல் 2020 செப்., வரையிலான பருவங்களில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மற்றும் துணைத்தேர்வு எழுதியோருக்கு, அவர்கள் தேர்வெழுதிய மையங்களிலேயே, மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதை பெறாதவர்களின் சான்றிதழ்கள், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.தேர்வு முடிவுகள் வெளியாகி மூன்றாண்டுகள் கழித்து, மதிப்பபெண் சான்றிதழ்கள் அழிக்கப்பட வேண்டும். ஆனாலும், 2014 முதல், 2020 வரை பாதுகாக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை பெற கடைசி வாய்ப்பாக, 2025, ஜன., 31 வரை அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள், தேர்வர்கள், உரிய ஆவணங்களுடன் அலுவலகத்தை அணுகி பெறலாம். அவ்வாறு பெறாதோரின் சான்றிதழ்கள் அழிக்கப்படும்.பின், பெற நினைத்தால், இரண்டாம் படிக்கான கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2827 7926 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி