உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சட்ட பல்கலை பட்டமளிப்பு விழா

சட்ட பல்கலை பட்டமளிப்பு விழா

சென்னை, பெருங்குடியில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை உள்ளது. இப்பல்கலையின் 14ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, நேற்று காலை 11:00 மணிக்கு நடந்தது.இதில் பங்கேற்ற கவர்னர் ரவி, 18 ஆராய்ச்சி மாணவர்களுக்கு முனைவர் பட்டமும், நன்கொடையாளர் திட்டத்தின் கீழ் 52 மாணவர்களுக்கு பதக்கங்களும், ஆறு மாணவர்களுக்கு ரொக்கப்பரிசும் வழங்கினார்.தவிர, தமிழகம் முழுதும் உள்ள சட்டக் கல்லுாரியில் பயின்ற 4,669 மாணவர்களுக்கு, இளநிலை மற்றும் முதுநிலை பட்டமும், இவ்விழாவில் வழங்கப்பட்டது.விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார், அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர் சந்தோஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி