மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு
17-Jun-2025
ஆலந்துார் :கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, காலவரையற்ற நீதிமன்ற போராட்டத்தை நடத்தி வரும் ஆலந்துார் வழக்கறிஞர் சங்கத்தினர், இன்று ஜி.எஸ்.டி., சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளனர்.ஆலந்துார் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட பள்ளிக்கரணை, அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, போக்குவரத்து புலனாய்வு பிரிவு, மேடவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து வழக்குகளையும், வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றக்கூடாது.அதேபோல், மேடவாக்கத்தை சுற்றியுள்ள, 10 கிராம சிவில் வழக்குகளை, தாம்பரம்நீதிமன்றத்திற்கு மாற்றக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 12ம் தேதி முதல், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை, ஆலந்துார் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஜி.எஸ்.டி., சாலையில் இன்று காலை மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாக, ஆலந்துார் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் மனோகரன், செயலர் கார்த்திகேயன் ஆகியோர் தெரிவித்தனர்.
17-Jun-2025