உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 114 நிழற்குடைகளில் எல்.இ.டி., விளக்குகள்

114 நிழற்குடைகளில் எல்.இ.டி., விளக்குகள்

அடையாறு:அடையாறு மண்டலத்தில், 12 வார்டுகளில் உள்ள, 114 பேருந்து நிறுத்த நிழற்குடைகளில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில், எல்.இ.டி., விளக்குகள் அமைக்கப்பட உள்ளன.அடையாறு, காந்தி நகர் பேருந்து நிலையம் அருகில், 150 வாட்ஸ் எல்.இ.டி., விளக்குடன் கூடிய, 12 மீட்டர் உயரம் கொண்ட உயர்கோபுர விளக்கு அமைக்க, 6 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.பெசன்ட் நகரில், 48 வாட்ஸ் விளக்குடன், 40 மின் கம்பங்கள் அமைக்க, 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.மேலும், தரமணி, கோட்டூர், பாரதி நகர் ஆகிய மயானங்களில், 25 கே.வி.ஏ., திறன் கொண்ட, மூன்று ஜெனரேட்டர்கள் வாங்க, 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த பணிகளும், அடுத்த மாதம் துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை