கள்ளக்காதலி வீட்டுமுன் தீக்குளித்து லாரி உரிமையாளர் தற்கொலை
நங்கநல்லுார் : கள்ளக்காதலி வீட்டுமுன் தீக்குளித்து லாரி உரிமையார் தற்கொலை செய்தது சலசலப்பை ஏற்படுத்தியது. நங்கநல்லுார், ரத்னாபுரம், ரகுபதி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன், 49; லாரி உரிமையாளர். மனைவி, பிள்ளை களுடன் வசித்து வந்தார். இவருக்கும் பழவந்தாங்கல் காவல் எல்லையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, ஐந்து ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்தாண்டு முதல் ஆனந்தனுடனான உறவை, குடும்ப நலன் கருதி அப்பெண் துண்டித்துள்ளார். ஆனால், தன்னுடன் முன்போல சகஜ மாக இருக்கும்படி ஆனந்தன் வற்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்த பெண் ணின் வீட்டிற்கு பெட்ரோல் கேனுடன் குடிபோதையில் சென்ற ஆனந்தன், தன்னுடன் வாழ வரவில்லை என்றால் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்வேன் என, மிரட்டி உள்ளார். ஆனால், அந்த பெண் தனது குடும்பமே முக்கியம் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார். இதில், மனமுடைந்த ஆனந்தன், ஒரு கட்டத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுதும் கருகிய நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தன், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். பழவந்தாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர் .