மேலும் செய்திகள்
சிறுமியை திருமணம் செய்த இளைஞருக்கு 'போக்சோ'
02-Jan-2025
புளியந்தோப்பு, புளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணின், 17 வயது மூத்த மகள், எட்டாம் வகுப்பு வரை படித்து விட்டு, சென்னையில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்கிறார். இரண்டு ஆண்டுக்கு முன், பிரகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஆறு மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழும், 17 வயது சிறுமிக்கு, சதீஷ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை சிறுமியின் தாய் கண்டித்த நிலையில், 3ம் தேதி வீட்டிலிருந்து சிறுமி மாயமானார். சிறுமியின் தாய் புளியந்தோப்பு மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமி கர்ப்பமானபோது, போலியாக வேறு ஒருவரின் ஆதார் அட்டையை பயன்படுத்தி, பெயர் மற்றும் வயதை மாற்றி குழந்தை பெற்றது தெரியவந்தது. மாயமான சிறுமி, சதீஷ்குமாருடன் திருவாலங்காடு பகுதியில் தங்கியிருந்ததை கண்டுபிடித்த போலீசார், இருவரையும் அழைத்து வந்தனர். சிறுமியை திருமணம் செய்து, குழந்தைக்கு தாயாக்கிய முதல் கணவர், காதலன் ஆகிய இருவர் மீதும், போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர். சிறுமியை, அவரது தாயிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
02-Jan-2025