உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாட்டரி வாங்கியவரை கத்தியை காட்டி மிரட்டிய லாட்டரி விற்றவர் கைது

லாட்டரி வாங்கியவரை கத்தியை காட்டி மிரட்டிய லாட்டரி விற்றவர் கைது

குமரன் நகர்: சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்ததுடன், லாட்டரி வாங்கிய நபரை கத்தியைக் காட்டி மிரட்டிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர். மேற்கு மாம்பலம், குமரன் காலனி முதல் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 42. இவர், மேற்கு மாம்பலம், கங்கையம்மன் கோவில் தெருவில், சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்துவந்த, காளி, 33, அரவிந்த் ஆகியோரிடம், கடந்த 10 நாட்களாக, தினமும் 500 ரூபாய்க்கு லாட்டரி வாங்கியுள்ளார். பரிசு ஏதும் கிடைக்காததால், தான் லாட்டரி வாங்க அளித்த பணத்தை திருப்பி தரும்படி, காளி மற்றும் அரவிந்திடம் சரவணன் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், சரவணனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கத்தியை காட்டி மிரட்டினர். இதுகுறித்து, குமரன் நகர் காவல் நிலையத்தில், சரவணன் புகார் அளித்தார். அதன்படி விசாரித்த போலீசார், கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த காளி, 33, என்பவரை, நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து, 8,000 ரூபாய், 2 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள அரவிந்தை, போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை