உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாமன் கழுத்தை கத்தியால் கிழித்த மச்சான் கைது

மாமன் கழுத்தை கத்தியால் கிழித்த மச்சான் கைது

புளியந்தோப்பு: புளியந்தோப்பு, வீரா செட்டி தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன், 52. இவரது தங்கை விஜயாவின் கணவர் செல்வம், 48. மாமன், மைத்துனரான இருவரும் ஆட்டோ ஓட்டுநர்கள். புளியந்தோப்பு, பிரகாஷ்ராவ் காலனியில் நேற்று முன்தினம் மது அருந்தினர். அப்போது, தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டனர்.ஆத்திரமடைந்த செல்வம், தன் ஆட்டோவில் இருந்த கத்தியால், கோவிந்தராஜனின் இடது பக்க கழுத்தில் கிழித்துள்ளார். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கோவிந்தராஜனுக்கு 5 தையல் போடப்பட்டது. புளியந்தோப்பு போலீசார், செல்வத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ