தபால் பெட்டியை திருடியவர் சிக்கினார்
கோயம்பேடு, அரும்பாக்கத்தில் உள்ள அஞ்சல் நிலையத்தில் பணி புரிபவர் சந்திரா. இவர், கடந்த 17ம் தேதி வழக்கம்போல் அரும்பாக்கம், வள்ளுவர் சாலையில் உள்ள தபால் பெட்டியில் இருந்து தபால்களை சேகரிக்க சென்றார்.அப்போது, தபால் பெட்டி திருடப்பட்டிருந்தது. கோயம்பேடு போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், மூன்று சக்கர மிதிவண்டியில் வந்த நபர், தபால் பெட்டியை திருடி செல்வது பதிவாகி இருந்தது.விசாரணையில், ரெட்டேரி, லஷ்மிபுரம் நடைபாதையில் தங்கி, பழைய காகிதம் சேகரித்து விற்பனை செய்யும், பிரபு, 40, என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.