உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொது டீக்கடை ஊழியரை தாக்கி பணம் பறித்த நபர் கைது

பொது டீக்கடை ஊழியரை தாக்கி பணம் பறித்த நபர் கைது

விருகம்பாக்கம், டீக்கடை ஊழியரை தாக்கி பணம் பறித்த நபரை, போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், 28. இவர், சாலிகிராமத்தில் உள்ள தன் சித்தப்பா வீட்டில் தங்கி, அவர் நடத்தும் டீக்கடையில் பணி புரிகிறார்.கடந்த 23ம் தேதி, கார்த்திக் டீக்கடையில் இருந்தபோது, அங்கு வந்த அஜித்குமார் என்பவர் மது அருந்த பணம் கேட்டுள்ளார்.கார்த்திக் பணம் தர மறுக்கவே, அவரை அஜித்குமார் தாக்கி, கல்லாவில் இருந்த 1,500 ரூபாயை பறித்தார். மேலும், கடையில் இருந்த கண்ணாடி பாட்டில்களை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.இது குறித்து, விசாரித்த விருகம்பாக்கம் போலீசார், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த அஜித்குமார், 27, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கத்தி, 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அஜித்குமார் மீது 16 வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ