உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணிடம் அத்துமீறிய நபர் கைது

பெண்ணிடம் அத்துமீறிய நபர் கைது

சென்னை:ராயப்பேட்டையைச் சேர்ந்த, 19 வயது இளம்பெண், கடந்த 10ம் தேதி காலை வேலைக்கு செல்வதற்காக வி.பி., ராமன் சாலை வழியாக நடந்து சென்றார்.அப்போது, 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் வந்த நபர், அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இளம்பெண் சத்தம் போடவே, மர்மநபர் அங்கிருந்து தப்பினார். ராயப்பேட்டை போலீசாரின் விசாரணையில், திருவல்லிக்கேணி வீராசாமி தெருவைச் சேர்ந்த ஜெகதீஷ், 40, என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை