உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டோ ஓட்டுநரை கல்லால் தாக்கியவர் கைது

ஆட்டோ ஓட்டுநரை கல்லால் தாக்கியவர் கைது

சாஸ்திரி நகர், அடையாறு, வண்ணான்துறை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ், 35. ஆட்டோ ஓட்டுநர். நேற்று முன்தினம், வண்ணான்துறை பகுதியில், தனியார் நிகழ்ச்சி சார்ந்த பேனர் வைத்து கொண்டிருந்தார்.அப்போது, அங்கு சென்ற அடையாறு பகுதியை சேர்ந்த சரத்குமார், 30, என்பவர், இங்கு எப்படி பேனர் வைக்கலாம் என, கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சரத்குமார், கீழே கிடந்த கல்லை எடுத்து, சந்தோஷை சரமாரியாக தாக்கினார்.இதில், தலையில் பலத்த காயமடைந்த சந்தோஷ், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சாஸ்திரி நகர் போலீசார், சரத்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை