மயான ஊழியரை தாக்கியவர் கைது
வேப்பேரி:மயான பூமி ஊழியரை, காலி மதுபாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். ஓட்டேரி, திடீர் நகரைச் சேர்ந்தவர் சுரேந்தர், 21; ஓட்டேரி மயான பூமி ஊழியர். இவர், நேற்று காலை ஓட்டேரி, ஆர்.கே.புரத்தில் உள்ள அவரது பாட்டியை பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக வாகனத்தை எடுக்க முயன்றார். அப்போது அவருக்கு தெரிந்த இம்மானுவேல், 23 என்பவர், வீண் தகராறு செய்து கையாலும், காலி மதுபாட்டிலாலும் தலை மற்றும் தோள் பட்டையில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். இதில் பலத்த காயமடைந்த சுரேந்தர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், வேப்பேரி போலீசார் புரசைவாக்கத்தைச் சேர்ந்த இம்மானுவேல், 23 என்பவரை கைது செய்தனர்.