மேலும் செய்திகள்
போலீசுக்கு 'தண்ணி' காட்டியவர் கைது
22-May-2025
சென்னை, குமரன் நகர் அடுத்த நல்லாங்குப்பம், 2வது பிளாக், 60வது தெருவைச் சேர்ந்தவர் தேவி, 38. இவர், நேற்று முன்தினம் அதிகாலை, இவரது வீட்டின் வெளியே பாட்டில் உடைக்கப்படும் சத்தம் கேட்டு, தேவியும் அவரது கணவர் காளிதாசும் வெளியே வந்தனர்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த விஜய், 28,என்பவர், கத்தியை காட்டி மிரட்டி, காளிதாஸ் பாக்கெட்டில் இருந்து 200 ரூபாயை பறித்துக் கொண்டார். மேலும், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த தேவியின் ஸ்கூட்டரை, பெட்ரோல் ஊற்றி தீயிட்டு எரித்தார். அக்கம்பக்கத்தினர் அவரை பிடிக்க முற்பட்டபோது, கத்தியை காட்டி மிரட்டி, அங்கு இருந்து தப்பிச் சென்றார்.இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்த குமரன் நகர் போலீசார், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய விஜயை, நேற்று கைது செய்தனர்.
22-May-2025